மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 6 அக்டோபர், 2010

ரெண்டாப்பு


ம்ம்ம்... ஒருவழியா அடுச்சுபிடுச்சு ஒன்னாப்பு டீச்சருக்கிட்ட இருந்து தப்பிச்சு ரெண்டாப்பு வந்தாச்சு. ஒருநாள் வாத்தியார் பாடம் நடத்திக்கிட்டு இருந்தப்ப, திடீர்னு, நம்ம இளமாறன் பயலோட அப்பா வந்தாரு. அவனுக்கு என்னமோ ஒரு வியாதி இருக்குறதாகவும், அவன மதுரையில போயி படிக்க வச்சுக்கிட்டே வைத்தியம் பார்க்கப் போறதாகவும் வாத்தியாருக்கிட்ட சொல்லிக்கிட்டு அவன கூட்டிக்கிட்டு போயிட்டாரு.. எங்களுக்கெல்லாம், ஒரு பக்கம் வருத்தமா இருந்தாலும், இன்னொரு பக்கம் "அய்யய்யோ! இந்தப்பய போயிட்டான்ன யாரு வாயில ஈயப் போட்டு வெளையாடுறது"ங்குற கவலைதான் அதிகம். ஒரு அவங்க அப்பா பள்ளிக்கொடத்துக்கு வந்து.

அடுத்து மோசஸின் வருகை...

என்னடா திடீர்னு பைபிள்ல இருந்து என்னத்தையோ எடுத்து சொல்றானேன்னு பயப்புடாதீங்க...

அதாவது அன்னைக்கி மோசஸ்-னு ஒரு பையன அவங்க அப்பா பள்ளிக்கொடத்துக்கு கூட்டிக்கிட்டு வந்து வாத்தியாருக்கிட்ட சொல்லி சேத்து விட்டுட்டு போனாரு. அவன பாக்க பூனைக்குட்டி மாதிரி அமைதியா ரொம்ப நல்ல புள்ளயா மொத வரிசைல ஒக்காந்திருந்த எம்பக்கத்துல வந்து ஒக்காந்தான். நானும் சும்மா லேசா ஒரு சிரிப்பா சிரிச்சு வச்சேன்.

அதே நாள்ல இன்னொரு பையன அவனோட அப்புத்தா வந்து சேத்துவிட்டுட்டு போனாங்க... அவன் பேரு அருள் அப்படின்னு அவங்க அப்புத்தா சொன்னாங்க.. அதோட இல்லாம அவன் அமரிக்காவுல பொறந்தவன். அவுக அப்பா அம்மா கொஞ்ச நாள் இங்க படிக்கட்டும்னு சொல்லி சேத்துவிட சொன்னாக அப்படின்னும் ஒரு பில்ட் அப் அந்த கெழவி விட்டுட்டு போச்சு. (அது வேற யாரும் இல்ல... எங்க சொந்தக்கார கெழவிதான்! அது சொன்னதும் உண்மைதான்)

என்னமோ தெரியல.. அதுல இருந்து அந்த பயல பாக்கவே பிடிக்கல... (அதுல வேற அவன் செகப்பா கொலு கொலு-ன்னு வேற இருந்தானா... அதான்! ஹிஹி) "என்னமோ பெரிய பந்தா பண்ணிக்கிராக" அப்பிடின்னு அவன்கிட்ட லேசாக்கூட சிரிக்கல... உண்மைய சொல்லனும்னா அந்த வயசுல பந்தா-ன்னா என்னனே தெரியாது.. இருந்தாலும் அப்ப ஏதோ தோனுச்சு.. அதுக்கு பின்னாடி நானும் மோசஸும் ரொம்ப நல்ல பிரண்ட்ஸ் ஆயிட்டோம்.. அந்த அருள் பயலும் வந்து வந்து பேசுவான்.. ஆனா, நாங்க அவன் கூட வெளையாடவே மாட்டோம். அப்பவே அப்பிடி ஒரு ரப்பு...

அப்புறம் ஒரு ஆறுமாசத்துலயே அவன் பள்ளிக்கொடத்த விட்டு வெலகிட்டான். இருந்தாலும் எங்களுக்கு அந்த பாதிப்பு ஒண்ணுமே இல்ல...

இப்பவும்கூட அருள் அமெரிக்காவுலதான் இருக்கான் என கேள்விப்பட்டேன்.. இதைக்கூட அவன் படிக்க நேரிடும். அவனுக்கு ஞாபகம் இருக்குமான்னு தெரியல... ம்ம்ம் பார்ப்போம்...

சரி சரி மூணாப்புக்கு போவோமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக