மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

ஒன்னாப்பு

நன்றாக நினைவிருக்கிறது.... எனக்கு ஐந்து வயது ஆகுமுன்னே, என்னை ஒன்னாவது வகுப்பில் (ஒன்னாப்பில்) சேர்த்துவிட்டார்கள். என்னை தினமும் எனது அக்கா பள்ளிக்கு இழுத்துச் செல்வார்கள்... கூட்டிச்சென்றார்கள் என்றால் உண்மையை மறைத்ததுபோல் ஆகிவிடும். பள்ளிக்கொடம் வரைக்கும் தர தரன்னு அவுங்க முழு பலத்தையும் உபயோகித்து இழுத்துப்போவார்கள். நானும் எனது முழு பலத்தையும் உபயோகித்து (நான் மட்டும் என்ன சளைத்தவனா? அவுக தம்பிதானே... ஹஹா) கால் ரெண்டையும் தரையில் நன்றாக ஊன்றிக்கொண்டு ஒரு அடிகூட எடுத்துவைக்காமல் அவங்ககூடவே இழுபட்டுக்கிட்டு போவேன் (என்னதான் இருந்தாலும் நான் சின்னப்புள்ளதானே... ஹிஹி)

அங்க பள்ளிக்கொடத்துக்கிட்ட போன ஒடனேயே, எங்க ஒன்னாப்பு டீச்சர் (இப்படிப்பட்ட டீச்சர் பேரையே மறந்துப்புட்ட பாவி நானு) என்னயப்பாத்து ஒரு மொற மொறப்பாங்க பாருங்க... அப்புடியே பூனைக்குட்டி நம்ம மடிக்குள்ள நைஸா ஒக்கார்ற மாதிரி அப்பிடியே அடங்கிருவேன்.

இந்தமாரியே நான் ஒரு ரெண்டு மாசம் போனேன். அப்பறம் எல்லாம் சரியாப்போச்சு... நல்ல புள்ளயா மாறிட்டேன்..

என்னடா ரெண்டு மாசத்துல ரொம்ப நல்லா புள்ளயா மாறிட்டானேன்னு பாக்குறீங்களா (சினிமா வில்லன் மட்டும் கடேசி அஞ்சு நிமிஷத்துல நல்ல மனுஷனா மாறிரலாம் நாங்க மட்டும் மாறக்குடாதோ?)
அதுக்கும் ஒரு காரணம் இருந்துச்சு. அது என்னான்னா...

பழைய கொசுவர்த்திச் சுருள் நீங்களே போட்டுக்கங்க ப்ளீஸ்... எனக்கு அவசரத்துக்கு கெடக்கல..

எங்க ஒன்னாப்புல அப்பத்தான் புதுசா ஒரு பய சேர்ந்திருந்தான். அவன் பேரு இளமாறன். எங்க டீச்சர் அங்கங்க போற அஞ்சு நிமுசத்துல கூட வாயப்பொளந்துகிட்டு தூங்கிருவான்... அப்ப எங்களுக்கு வெளயாட்டே, அவன் வாய்க்குள்ள ஈய அடிச்சு போடுறதுதான்... அதுகூட எங்களுக்கு பெரிய விஷயம் இல்ல.. அதையும் தாண்டி அந்த ஈய போட்டோனே, அப்படி ஞவ் ஞவ்-னு மென்னு திம்பான் பாருங்க... அப்பத்தான் விழுந்து விழுந்து சிரிப்போம்... இப்படியே அவன் தின்னு தின்னு எங்க ஊர்ல ஈப்பஞ்சமே வந்துருச்சுனா பாத்துக்கங்க!

இப்படியா ஒன்னாப்பு ஓடிப்போச்சு... ரெண்டாப்புல போய் சேந்தோம். ஒருநாள் வாத்தியாரு பாடம் நடத்திக்கிட்டுருந்தப்பதான்....

5 கருத்துகள்:

  1. Arumayana pathivu...en palli natkall appadiya vathuvitathu..pathivuku Nantrikal!!!

    பதிலளிநீக்கு
  2. ஆஹா மாப்பு!, பட்டயை கிளப்ப ஆரம்பிச்சுட்ட....! சூப்பர் டா . . .! எனது பள்ளி நாட்கள் கண்முன் வந்து செல்கிறது . . .

    பதிலளிநீக்கு
  3. இன்னும் பட்டய கெளப்புவோம்! வாழ்த்துக்களுக்கு நன்றி மாப்ஸ்...

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப ஜாலியா ஆரம்பிச்சீங்க, அப்புறம் ஆளையே காணோம்!
    இதுதானே வேணாங்கறது. அட வந்து ஆடடம் போடுங்கைய்யா !
    நல்லா கிண்டலடீபிங்க போல. இந்த மேரி ஆளுதா இங்க வேணும் !!

    பதிலளிநீக்கு